Breaking

Monday, 6 July 2020

Nagercoil News - கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு எஸ் .ஆஸ்டின் எம்எல்ஏ அவர்களின் கண்டன அறிக்கை


நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மதிய உணவு குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காததால் அவர்கள் வார்டை விட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு எஸ் .ஆஸ்டின் எம்எல்ஏ அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்


நேற்றைய தினம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மதிய உணவு குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காததால் அவர்கள் வார்டை விட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று காலை 9 மணி வரை அவர்களுக்கு எவ்வித உணவும் வழங்கப்படவில்லை. அதன்பின்னர் கல்லூரி நிர்வாகம் உப்புமா தயார் செய்து வழங்கியுள்ளது.அதேபோல் மதியம் 3 மணி வரை மதியஉணவும் வழங்கப்படாததால்அவர்கள் மீண்டும் வெளியே வந்து கோஷம் எழுப்பி போராடியதின் விளைவாக,அவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் உணவு தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது.அதே வார்டில் சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சர்க்கரை நோயாளிகள் மற்றும் குழந்தைகளும் உள்ளனர்.இவர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு வழங்கப்படாததால் அவர்களின் நோயின் தீவிரம் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. நேற்று முன்தினம் வார்டுக்கு அழைத்து வரப்பட்ட 50 வயது கடந்த ஒருவருக்கு இரவு எந்த வித உணவு வழங்காமல்,காலையில் இரண்டு இட்லி மட்டும் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தமிழக முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு 5 வேளை சத்தான உணவு வழங்கி வருகிறோம் என்று ஒரு உணவு பட்டியலை திரும்பத் திரும்ப தொலைக்காட்சி மூலம் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே அது கொடுக்கப்படவில்லை. கொடுக்க கூடிய சாதாரண உணவினை கூட சரியான நேரத்தில், சரியான அளவில், கொடுக்கவில்லை என்பது அவர்களின் போராட்டத்தின் மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது. கொரோனாவிற்கு நோயை முற்றிலும் குணமாக்கும் மருந்து இதுவரை இல்லை.சத்தான உணவினை தேவையான அளவு சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் தான் அவர்களை விரைவில் குணப்படுத்த முடியும். ஆனால்,அரசும்,அதன் சுகாதாரத்துறையும் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்று அக்கறையின்றி செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.. என திரு. எஸ்.ஆஸ்டின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் .

No comments:

Post a Comment