Breaking

Tuesday, 23 February 2021

காதலி பேசாததால் மனமுடைந்த கார் டிரைவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

காதலி பேசாததால் மனமுடைந்த கார் டிரைவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை




கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார் டிரைவர்

கன்னியாகுமரி அருகே தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் விக்னேஷ் (வயது23). இவர் கன்னியாகுமரியில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

இவர் இருளப்பபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக அந்த பெண் இவருடன் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் மனவருத்தத்தில் இருந்து வந்தார். அவரை நண்பர்கள் தேற்றி வந்தனர்.

தற்கொலை:
நேற்று மாலை வீட்டின் படுக்கை அறையில் சென்ற விக்னேஷ் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அறையில் சென்று பார்த்த போது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.  
இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment