சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர்அவர்களின் புகழ் வணக்கம்!
இயற்கையோடு கலந்த மூத்த அரசியல் தலைவர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு புகழ் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏🏼
அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக அரசியல் நண்பர்கள் அனைவரது துயரிலும் பங்கெடுக்கிறோம் .
குறிப்பாக ஐயாவின் அன்பு மகள் மதிப்பிற்குரிய அக்கா தமிழிசை அவர்கள் இத்துயரிலிருந்து விரைவில் மீண்டுவர காலம் துணைபுரியட்டும்.
குமரி மாவட்டத்தின் பெருமைமிகு ஆளுமை அடையாளமாய்,
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்து, 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி , பனை பாதுகாப்பு , மதுவிலக்கு என பல மக்கள் நல கோரிக்கைகளுக்காக நடைபயணங்கள் செய்து ஒரு சிறந்த அரசியல்வாதிக்கான உதாரணமாக திகழ்ந்த ஐயா குமரி அனந்தன், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் காலம் கடந்தும் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படுவார்.
மரிய ஜெனிபர்
நாம் தமிழர் கட்சி

No comments:
Post a Comment