சென்னை:
14-07-2020
தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம்.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,099 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 743 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை- 553 ஆக அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment