நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் நாகர்கோயில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
ஆதலால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் அனைத்து விதமான விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் விளம்பர வரைபடங்கள் வரைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடைஉத்தரவுகள் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.
இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment