நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரசாந்த் மு வடநேரே அவர்களின் உத்தரவின்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் அவர்களின் வழிகாட்டுதலின் படி அனைத்து வீடுகளிலும் சளி ,இருமல் ,காய்ச்சல் இருப்பவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment