Breaking

Wednesday, 8 July 2020

Kuwait News - குவைத் நாட்டில் ஜூன் மாதத்தில் இந்தியர்களின் இறப்பு எண்ணிக்கை 125-ஆக அதிகரிப்பு


குவைத்:

குவைத் நாட்டில் ஜூன் மாதத்தில் இந்தியர்களின் இறப்பு எண்ணிக்கை 125-ஆக அதிகரிப்பு புள்ளிவிவரங்கள்:

குவைத்தில் கடந்த காலங்களில் ஒரு மாதத்திற்கு சராசரி 58 முதல் 60 இறப்பு செய்தி தான் பதிவாகும். அனால் சென்ற ஜூன் மாதம் 125 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் கொரோனா(சிலர்), தற்கொலை, மாரடைப்பால் தான் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது. 

மேலும் கடந்த நான்கு மாதங்களாக பெரும்பாலான  தனியார் நிறுவனங்களுக்கு வேலை இல்லை. சில நிறுவனங்கள் தங்கள் தொழிலார்களுக்கு செலவுக்கான தொகையை மட்டுமே கொடுத்ததும், பல நிறுவனங்கள் எதுவுமே கொடுக்க வில்லை.
இங்கு இருக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுக சேவையாளர்கள் முலம் கிடைத்த உணவு பொருட்களை வைத்து நாட்களை கடத்தி வருகின்றனர். 

மாரடைப்பு மற்றும் தற்கொலை ஏற்பட காரணங்கள் சில குடும்பங்களில் பணம் என்ற ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது( எவன் செத்தால் என்ன அவர்களுக்கு பணம் பொருள் ஆடம்பரத்தை தவிர ஏதுவும் வேண்டாம்). போன் செய்து பேசும் போது ஆறுதல் வார்த்தை கூற மாட்டார்கள். பணம் எப்போது வரும் என்ற கேள்வி மட்டும் தான் இருக்கும். 

வெளிநாட்டுல் வேலை செய்யும் தொழிலாளி குடும்பத்தை விட்டு வந்து,  தனிமையில்  குடும்பத்திற்காக உழைக்கிறான். இந்த புரிதல் இருந்தால் மட்டுமே இறப்பு விகிதம் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குவைத்தில் மற்ற நாட்டவர்கள் உயிரிழப்புகள் கணக்கிடுகையில் இந்தியர்கள் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகமாகும்.

இதில் மற்ற மாநிலங்களை விட ஆயிரக்கணக்கான
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்புவதற்கு அரசின் விமான சேவைகள் நடைமுறைகள் திட்டமிடுதல் சரியில்லாத காரணத்தால் கடுமையான அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை வரையில் சென்றுள்ளனர். சில தனியார் ஏஜென்சிகள் தனி அனுமதி விமான சேவைகள் வழங்கினாலும், கடந்த 4 மாதங்களாக உணவுக்கே வழியின்றி தவிக்கும் நமது உறவுகளும்  அவர்கள் நிர்ணயம் செய்துள்ள கட்டணங்கள் மிகப்பெரிய தொகையாகும். இதற்கு தமிழக அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தமிழர்கள் வாழ்வில் விடிவுகாலம் பிறக்கும்.



                                                                                                       சமூக ஆர்வலர் 
                                                                                                      -ஆல்வின் ஜோஸ், குவைத் 

No comments:

Post a Comment