இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யும் முன்பு 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில், தற்சமயம் வெளியாகி உள்ள தகவல்களின் படி புதிய Hyundai Tucson Facelift
மாடல் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் Tucson Facelift காரின் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. காரை சுற்றி எடுக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அப்டேட்களை தெளிவாக காட்டுகிறது.
புதிய மேம்பட்ட மாடல் டீசல் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும், சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கார் வெளிப்புறம் கேஸ்கேடிங் கிரில், புதுவடிவமைப்பு கொண்ட ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய Tucson Facelift மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 149 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

No comments:
Post a Comment