சவுதி அரேபியா :
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாதக் குழந்தையின் 50 லட்சம் அளவிலான மருத்துவ செலவையும் சவுதி அரசு சலுகை செய்து உதவியது.
சவுதின் நஜிரான் மருத்துவமனையில் கடந்த 4 வருடங்களாக செவிலியராக சேவை செய்து வருபவர் ஜோஸ்பின். ஜோஸ்பின் கணவருடன் சேர்ந்த குடும்பமாக வசித்து வருகின்றார்கள்
இவர்கள் இந்திய தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதிகளுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 7 மாதத்தில் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து இந்த குழந்தைக்கு இதயவால்வு தொடர்பான பிரச்சினை காரணமாக உயிருக்கு போராடி வந்தது.
மேலும் குழந்தை பிறந்து கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வென்டிலேட்டர் உதவியுடன் பல்வேறு உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கிய வகையில் 32 லட்சம் வரையில் மருத்துவமனை கட்டணமாக வந்துள்ளது. இந்த பெருமை தொகையை கட்டுவதற்கு என்ன செய்யது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
மேலும் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்தைத் தொடர்ந்து உயிரை காப்பாற்ற நவீன அறுவைச் சிகிச்சைக்காக சவுதியின் ஜிந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.
இதையடுத்து செய்வதறியாமல் அடுத்து எண்ண செய்து என்று முயற்சிகள் செய்யும் நேரத்தில் இந்த தம்பதிகளின் நிலைமை கேள்விப்பட்டு இந்தியன் சோசியல் ஃபோரம் Incharge மீரான் அவர்கள் சவுதியின் அமீர் அலுவலகத்திற்கு இவர்கள் நிலைமை குறித்து விளக்கமளித்து கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து குழந்தையின் மருத்துவம கட்டணங்கள் முழுவதும் இலவசம் செய்து மன்னர் அவர்கள் அணையின் அடிப்படையில் அமீர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் நஜிரான் மருத்துவமனையில் இருந்து குழந்தையை ஜிந்தா அழைத்துச் செல்ல இலவசமாக தனி Air-Ambulance-க்கும் ஏற்பாடும் அமீர் அலுவலகம் செய்து கொடுத்தது. தொடர்ந்து ஜித்தா கிங்-அசிஸ் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்காக 8 லட்சம் வரையில் அடுத்தது செலவானது.
இதையும் அமீர் அலுவலகம் தலையிட்டால் இலவசம் செய்து வழங்கப்பட்டது. அங்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், வென்டிலேட்டர் வசதிகள் உடைய இந்த அரசின் வந்தே-பாரத் விமானத்தில் 3 லட்சம் வரையில் கட்டணம் செலுத்தி, சவுதி அரசு செலவில் நேற்று கோயம்புத்தூர் வந்த இந்திய-சவுதி விமானத்தில் மனைவி
ஜோஸ்பின் மற்றும் கணவர் ஜெகன் செல்வராஜ் மகிழ்ச்சியான தாயகம் திரும்பினர்.
சவுதி அரசின் இந்த பெரிய உள்ளத்திற்கு தாயகம் திரும்பும் நேரத்தில் விமான நிலையத்தில் சவுதி மன்னருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
தகவல்: குவைத் தமிழ் பசங்க


No comments:
Post a Comment