Breaking

Thursday, 9 July 2020

Corona Updates Kanyakumari - கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று


நாகர்கோவில் :
09-07-2020
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 872 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 336 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். 


No comments:

Post a Comment