
மாநகராட்சி ஊழியருக்கு கொரோனா:
நாகர்கோவில் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

பொதுமக்களை மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதிக்க மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயசேகரன் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரோனா :
நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனை எதிரே மருத்துவர் வசித்த வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடசேரி தற்காலிக சந்தையில் ஒருவருக்கு கொரோனா:
வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் தற்காலிக சந்தையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் கடை மற்றும் அவர் மொத்த கொள்முதல் செய்த கடையும் மூடப்பட்டது..

மேலும் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தற்காலிக சந்தையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் அறிவுறுத்தலின் படி மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் பாதிக்கப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment