தூத்துக்குடி:
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இன்று முதல் சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். பிறகு ஜெயராஜ் வீட்டுக்குச் சென்று, அவர், குடும்பத்தாரிடம், நடந்தவை குறித்து கேட்டறிந்தனர்.
கொலை வழக்கு பதிவு:
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது :
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்க பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

No comments:
Post a Comment