Breaking

Monday, 6 July 2020

Corona Virus in kanyakumari - தனியார் மருத்துவமனை பயிற்சி டாக்டர்களுக்கு கொரோனா தொற்று..


குலசேகரம்:

 கன்னியாகுமரி மாவட்டத்தில்  கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 
குலசேகரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆறாக இருந்தது, ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் 80 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் முளகுமூடு பகுதியை சேர்ந்தவருக்கும், சிவகங்கையை சேர்ந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இரண்டு பேரும் 
குலசேகரம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பயிற்சி டாக்டர்கள் என கூறப்படுகிறது.

கொரோனா பாதித்த பயிற்சி டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இடம் இல்லாததால் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் குலசேகரம் பகுதியில் வசித்து வருபவர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment