Breaking

Monday, 6 July 2020

Corona Virus Kanyakumari - மேட்டுக்கடை சாலையோரம் போடப்பட்டிருந்த கொரோனா தடுப்பு பாதுகாப்பு வேலி அகற்றம்



பத்மநாபபுரம்:

பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் மேட்டுக்கடை சாலையோரம் போடப்பட்டிருந்த கொரோனா தடுப்பு பாதுகாப்பு வேலி அகற்றப்பட்டது.

கொரோனா தொற்றால் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட சாரோடு, பெருமாள் கோயில், ராமன்பரம்பு மற்றும்  மேட்டுக்கடை ஆகிய ஊர்களில் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அப்பகுதிகளை சேர்ந்த 100 பேருக்கு மேற்பட்டோருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இப்பகுதியில் இதற்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது  தெரியாமல் மூதாட்டி ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேட்டுக்கடையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கணவன்-மனைவி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா உத்தரவின் பேரில் பத்மநாதபுரம் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் பாதுகாப்பு வேலி போடப்பட்டிருந்தது . இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவன் மனைவி இருவரும் நலமுடன் 3ம் தேதி இரவில் வீடு திரும்பினர். தொடர்ந்து இரண்டு நாட்கள் அப்பகுதியில் தூய்மை பணியுடன் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. நேற்று காலையில் பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளர், சுகாதார அலுவலர் ஆகியோர் வழிகாட்டுதலில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்ப வேலியை அகற்றி னர். 


No comments:

Post a Comment