Breaking

Sunday, 28 June 2020

புதிய Maruti Vitara Brezza SUV Car ஒரு பார்வை !!!

புதிய Maruti Vitara Brezza SUV  Car ஒரு பார்வை !!!


கொரோனாவால் பெரும் பிரச்சனையே நிகழ்ந்து வரும் நிலையில், Maruti Vitara Brezza SUV க்கு புக்கிங் நிதானமாக அதிகரித்து வருகிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறிது நாட்களிலேயே கொரோனா வைரஸ் பிரச்னையால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஷோரூம்கள் மூடப்பட்டதால் முன்பதிவு, விற்பனை என இரண்டிலுமே கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.
எனினும், சுதாரித்துக் கொண்ட மாருதி கார் நிறுவனம் ஆன்லைன் மூலமாக புக்கிங்கை திறந்துவிட்டதுடன், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஷோரூம்களை திறந்தது. இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா மீது வாடிக்கையாளர்களுக்கு மோகம் காரணமாக, தொடர்ந்து புக்கிங் அதிகரித்து வந்தது.
அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 26,000 பேர் Maruti Vitara Brezza SUV யை முன்பதிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மாருதி உயர் அதிகாரி சஷாங்க் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான இக்கட்டான தருணத்தில் ரிஸ்க் எடுக்க வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. மிகவும் நம்பகமான பிராண்டிலேயே முதலீடு செய்ய விரும்புவதை Brezza புக்கிங் காட்டுகிறது," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். 



புதிய Maruti Vitara Brezza SUV யில் டீசல் எஞ்சின் தவிர்க்கப்பட்டு, BS6 தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கொடுக்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 BHB பவரையும், 138 NM டார்க் திறனையும் வழங்கும். 5 Speed Manual அல்லது Automatic Transmission தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய Maruti Vitara Brezza SUV யில் suzuki  நிறுவனத்தின் Mild Hybrid சிஸ்டமும் உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக Start- Stop சிஸ்டம் மற்றும் Regenerative Breaking சிஸ்டம் மூலமாக பேட்டரியில் மின் ஆற்றல் சேமிக்கப்பட்டு, தேவைப்படும் நேரத்தில் கூடுதல் டார்க் திறனை வழங்கும். இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்வதுடன், சிறந்த செயல்திறனையும் வழங்கும்.


புதிய Maruti Vitara Brezza SUV வாடிக்கையாளர்களை கவர்ந்திருப்பதற்கு, முகப்பில் Gril, Headlight ClustersBumper ஆகியவற்றின் டிசைனில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் Projector headlights, LED பகல்நேர விளக்குகள், LED tail lights ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.



இந்த காரில் 16 Inch Dual tone alloy wheels7-inch touch screen கூடிய SmartPlay Infotainment சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் Apple Car Play மற்றும் Android Auto Applications களை சப்போர்ட் செய்யும்.

புதிய Maruti Vitara Brezza SUV கார் ரூ.7.34 லட்சம் முதல் ரூ.11.40 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. 

Hyundai Venue, Tata Nexon, Ford EcoSport, Mahindra XUV300 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.


No comments:

Post a Comment