Breaking

Saturday, 27 June 2020

Corona Virus Kanyakumari - கன்னியாகுமரி, மாடத்தட்டுவிளை மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று

கன்னியாகுமரி, மாடத்தட்டுவிளை  மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று


அழகியமண்டபம்:

உலகம் நாடுகள் கொரோனா வைரசின் தாக்கத்தால் கதி கலங்கி உள்ளது. இதனால், படிப்பு, வேலை போன்றவை காரணமாக வெளிநாடுகளில் தங்கி உள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் சொந்த ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் இங்கிலாந்து நாட்டில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இங்கிலாந்தில் கொரோனா பரவல் காரணமாக சிக்கி தவித்த மாணவி கடந்த 3 நாட்களுக்கு முன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர், இ-பாஸ் பெற்று கார் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டார். களியக்காவிளை வந்த அவருக்கு சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனைக்காக சளி, ரத்தம் சேகரிக்கப்பட்டது. பின்னர், அவரை ஆற்றூரில் அமைக்கப்பட்டுள்ள தனிமை மையத்தில் சுகாதாரத்துறையினர் தங்க வைத்தனர்.

இந்தநிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொரோனா வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment