Breaking

Sunday, 28 June 2020

Fishermen stuck in Iran - தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 63 மீனவர்கள் ஈரானில் தவிப்பு .



கருங்கல்:

ஈரானில் தங்கியிருந்த இந்திய மீனவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக தாயகம் திரும்ப இயலாமல் தவித்தனர். அவர்களை மீட்டு வர மத்திய அரசு தனி கப்பலை ஈரானுக்கு அனுப்பியது. 

ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்த கப்பலில் பயணம் செய்வதற்காக பதிவு செய்த மீனவர்கள் தங்களது விசாவை ரத்து செய்து 24-ந் தேதி பந்தர் அப்பாஸ் கப்பல் துறைமுகத்திற்கு வரவேண்டும் என்று கூறினார்கள்.அதன்பேரில் அனைத்து மீனவர்களும் தங்களது விசாவை ரத்து செய்து அரபியன் முதலாளிகளுக்கு செலுத்த வேண்டிய ரூபாயை செலுத்தி கப்பல் பயணத்திற்காக மூன்று நாட்களுக்கு முன்பே துறைமுகத்தில் வந்து சேர்ந்தனர். தற்போது கப்பல் 682 தமிழக மீனவர்கள் உள்பட சுமார் 700 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்டு உள்ளது.
 
ஆனால் தமிழகத்தை சேர்ந்த 43 பேர், கேரளாவை சேர்ந்த 20 பேர் என 63 மீனவர்களுக்கு கப்பலில் இடம் இல்லை என்று இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டார்கள். விசா ரத்து செய்யப்பட்ட நிலையில் அரேபிய முதலாளிகள் மீனவர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். அவர்கள் கடந்த 3 நாட்களாக உணவில்லாமல் தவிக்கிறார்கள்.

எனவே, மாநில மத்திய அரசுகள் உடனே நடவடிக்கை எடுத்து 63 மீனவர்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்குவதற்கு இடமும், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அனுப்பும் வரை உணவு வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை மாநில, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த தகவலை தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment