Breaking

Wednesday, 1 July 2020

Nagerkovil News - தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவில் :

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அரசு போக்குவரத்து கழகம் ராணிதோட்டம் கிளை-2 மேலாளர் பெருமாள் தலித் மக்களின் மீதான  தாக்குதல்களை நிறுத்த வேண்டும் இந்த விதமாக அராஜக போக்கை கடைப்பிடிக்கும் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிகளை வலியுறுத்தி குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

குமரி மாவட்டம் அரசு போக்குவரத்துக்கழகம் ராணி தோட்டம் பணிமனையில் தலித் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பணியாளர்களை ஜாதி ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வரும் ராணி தோட்டம் பணிமனை-2  மேலாளர் பெருமாள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து, பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஒரு நாள் முழுவதும் 10 இடங்களில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகிறது.  தலித் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காலம் தாமதித்தால் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தொடர் போராட்டத்தை நடத்தும் என்று குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

No comments:

Post a Comment