நாகர்கோவில்:
ராமன்புதூர் தளவாய்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வசிக்கும் வீடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ராமன்புதூர் சந்தை பகுதியில் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆஷா அஜித் IAS அவர்கள் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்கள்.
மேலும் KP ரோடு,டெரிக் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும்,
சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சானல் கரையில் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் நடைபெற்றுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.







No comments:
Post a Comment