Breaking

Sunday, 12 July 2020

Kanyakumari News - குழித்துறையில் குடித்துவிட்டு திருநங்கையுடன் ஆட்டம் போடும் நபர்களின் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சி


குழித்துறை: 

 குழித்துறையில் திருநங்கையுடன் குடித்துவிட்டு ஆட்டம் போடும் நபர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், கவலையையும் தந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.. இந்த கடைக்கு பின்பக்கம், தனிநபர் ஒருவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் இருக்கிறது.

இதனால் குடிமகன்கள், காலையிலேயே சரக்கு வாங்கி கொண்டு, இந்த வாழை தோட்டத்தில் புகுந்து விடுகிறார்கள்.. அங்கேயே குடிப்பது, போதையில் விழுந்து கிடப்பது என்றே ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த வாழை தோட்டத்தில் 55 வயது நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.. இவர் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. அதனால் அந்த மர்ம மரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தோட்டத்தில் ஒருவர் இறந்துவிட்டாரே, கேஸ் நடந்து கொண்டு இருக்கிறதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல், திரும்பவும் குடிமகன்கள் அதே தோட்டத்தில் கும்மாளம் அடித்து வருகிறார்கள். இன்றும் அப்படித்தான் வாழை தோட்டத்திற்குள் குடிமகன்கள் தண்ணி அடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு திருநங்கை உள்ளே புகுந்துவிட்டார்.. உள்ளே வந்தவர், குடிமகன்கள் குடித்து கொண்டிருந்த சரக்கை வாங்கி மடக் மடக் என குடித்துவிட்டார்.. ஆனால் குடிமகன்களோ சரக்கு போனால் என்று அந்த திருநங்கையுடன் ஜாலியாக ஆட்டம், பாட்டத்தில் இறங்கிவிட்டனர். இந்த கூத்தை தான் யாரோ வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் முகம் சுளிப்பதுடன், கவலை தெரிவித்தும் வருகின்றனர். இந்த பகுதியில் இது போன்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருவதால், போலீசார் ஸ்பெஷல் கவனம் செலுத்தி, இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதுடன், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

No comments:

Post a Comment