Breaking

Friday, 3 July 2020

Corona Virus Tamilnadu - தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது


சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1385 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,357 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 42,955 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 35,028 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 70 ஆயிரத்து 720 ஆக உள்ளது. 

சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 64,689 ஆக உள்ளது.

No comments:

Post a Comment