பூதப்பாண்டி:பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூர் காற்றாடிவிளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சோபியா. இவர்களுடைய மகன் முவின்ராஜ் (வயது 9). இவன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று வீடு அருகே உள்ள குளத்தில் முவின்ராஜ் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குளத்தில் மூழ்கி முவின்ராஜ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment