Breaking

Tuesday, 7 July 2020

Corona Virus in Tamilnadu - 06-07-2020 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்


சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   

சென்னையில் மேலும் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.     

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 3,793 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment