நாகர்கோவில்,
08-07-2020
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் ஆரம்ப காலகட்டத்தில் சொல்லும்படியாக இல்லை. பின்னர் வெளியூர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக பரவல் இருந்தது. அந்த பரவலையும் மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தியது.
08-07-2020 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இது குமரி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 50-க்கு மேல் சென்றுக்கொண்டிருந்தது, இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் 08-07-2020 காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 410 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 434 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ம் தேதி காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 51 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இன்று மதியம் 2.21 மணி நிலவரப்படி 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்று மருத்துவ வட்டாரம் தெரிவித்தது.

No comments:
Post a Comment