Breaking

Friday, 10 July 2020

09-07-2020 Corona Update Tamilnadu - தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



சென்னை:
தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,216 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 65 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 43 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3,994 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,652 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 42,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 14,91,783 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment