உலக தந்தையர் தினம்
உன் அன்பு நெஞ்சத்தில் ஆண்டவனும் அடைக்கலம் தேடுவான்.....!
மின்னல் போல நெஞ்சத்தில் மிளிரும் பாசத்தால்
ஆயிரம் அன்னையின் அன்பு கடலையும் கடந்து விடுவாய்..!
உலகில் தட்டு தடுமாறும் போதெல்லாம் உன் அன்பு கையால்
உலகயே ஆள கற்றுத் தருவாய்......!
தன் பிள்ளையின் கண்ணில் துளி கண்ணீர்
வரமால் இருக்க இரத்தம் சிந்த உழைப்பவன்.....!
தன் குடும்பம் பிரகாசிக்க தன்னையே உருக்கி
ஒளிதரும் அனைத்து தந்தையர்களுக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.....!
சோனாரா ஸ்மார்ட் டோட் என்ற பெண் அமெரிக்காவில் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். தனது தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். தனது தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1910ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தை கொண்டாடினார். இதனை அடிப்படையாகக்கொண்டு ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை (ஜூன் 18ஆம் தேதி) உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
https://greencitynagerkovil.blogspot.com
No comments:
Post a Comment