Breaking

Wednesday, 24 June 2020

U.S President Trump suspends H1B, other visas till 2020-end - புதிய வேலை விசாக்களை நிறுத்தி, நூறாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா


United States 
23-06-2020

 இந்திய ஐடி தொழிலாளர்களுக்கு அமெரிக்கா சென்று அங்கு வேலைபார்க்க வேண்டும் என்று கனவு எப்போதுமே இருக்கும். வேலைக்காக அமெரிக்கா சென்று அங்கேயே செட்டிலான குடும்பங்கள் ஏராளம். இந்திய ஐடி நிறுவனங்களும் அமெரிக்காவில் கிளைகள் திறந்து அங்கும் பலருக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்கி வருகின்றன. இந்திய ஐடி தொழிலாளர்களின் எதிர் காலத்தில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக அமெரிக்க அரசு வேலைவாய்ப்பு விசாக்களுக்குத் தடை விதித்துள்ளது.

கொரோனாவால் அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்து வருவதால் அங்கு வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. எனவே அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக, அங்கு வெளிநாட்டினர்களுக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் அமெரிக்க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குடியுரிமை அல்லாத ஹெச் 1பி உள்ளிட்ட பல விசாக்களுக்கு டொனால்டு ட்ரம்ப் இன்று தடை விதித்தார். இந்தத் தடை உத்தரவானது ஜூன் 24 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹெச் 1பி விசாக்கள் மூலமாக அமெரிக்காவுக்கு அதிகமாகச் செல்வது இந்தியர்கள்தான். அமெரிக்க அரசின் இந்தத் தடை உத்தரவுக்கு இந்திய ஐடி நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்புகள் வரவில்லை. ஆனால் விசா மூலம் ஊழியர்களை அமர்த்துவதை விடுத்து உள்நாட்டில் உள்ள ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் என்று கருதப்படுகிறது. அமெரிக்க அரசு சமீக காலமாகவே விசா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து விதித்து வருவதால் முன்னணி ஐடி நிறுவனங்கள் பல உள்நாட்டு தொழிலாளர்களையே பணியில் அமர்த்தத் தொடங்கிவிட்டன.

விப்ரோ, டிசிஎஸ், காக்னிசண்ட், ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 2019ஆம் ஆண்டில் வெறும் 5,900 ஊழியர்களையே பணியில் அமர்த்தியுள்ளன. இந்த ஆண்டில் விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களின் வேலைவாய்ப்பு அமெரிக்காவில் முற்றிலும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் வெளிநாட்டவர் வேலைக்காக அமெரிக்கா செல்வது இனி கேள்விக்குறியே. குறிப்பாக ஐடி துறையினரின் வருகை குறையும். இந்த ஆண்டில் மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் அடுத்துவரும் காலத்திலும் தடை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


No comments:

Post a Comment