Breaking

Wednesday, 24 June 2020

Political Leaders Condemned - சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் அரசியல் தலைவர்கள் கண்டனம்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் அரசியல் தலைவர்கள் கண்டனம் .


தூத்துக்குடி :
     23-06-2020

          தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தில், திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவர் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

சீமான் :
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை விசாரணை எனும் பெயரில் காட்டுமிராண்டித்தனமான தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்! - சீமான் | நாம் தமிழர் கட்சி

கமல்ஹாசன் :
 உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.

விஜயகாந்த் :
 விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் மரணம் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழக அரசு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

மு.க ஸ்டாலின் :
சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? உள்துறையைக் கையில் வைத்திருக்கும்
பதிலளிக்க வேண்டும்; உரிய நீதியும் வேண்டும்!


தொல் .திருமாவளவன் : #சாத்தான்குளம் காவல்வதை, இரட்டைக்கொலை- தொடர்புடைய காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனே சிறைப்படுத்த வேண்டும். அவர்களைப் பணியிடைநீக்கம் செய்யவேண்டும்.பிணையில் விடாமலேயே வழக்கை விரைந்து நடத்திக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி : ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்ட போது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.


உதயநிதி ஸ்டாலின்: 
அப்பாவிகளான சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் இருவரும் நீதிமன்ற காவலில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். போலீஸ் சித்ரவதையே காரணம் என்கிறார்கள். ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை’ என மீண்டும் நிரூபித்துள்ளது அம்மாவட்ட காவல்துறை.


No comments:

Post a Comment