Breaking

Saturday, 20 June 2020

Nagerkovil - நாகர்கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு

நாகர்கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு  




நாகர்கோவில் (Nagerkovil),
 இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இம்மாநகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது. இம்மாநகரின் வழியாக பழையாறு ஓடுகிறது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக திருநெல்வேலி மாவட்டமும் கேரள மாநிலமும் அமைந்துள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளால் மழை பெறும் மாவட்டமாகும்.நாகர்கோவில் மாநகரம் ஆனது தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு இயற்கை மாநகரம் (greenest city) ஆகும்.
நாகர்கோவில் நகராட்சி ஆனது பிப்ரவரி 14 , 2019 அன்று தமிழக அரசால் நாகர்கோவில் மாநகராட்சியாக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களால் தரம் உயர்த்தப்பட்டது.



வரலாறு:
     1920 இல் நாகர்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த போது நாகர்கோவில் நகராட்சி நிறுவப்பட்டது. 1947-இல் நாகர்கோவில் நகராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம், குமரி விடுதலைப் போராட்டத்தின் விளைவாக, 1 நவம்பர் 1956 அன்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மாவட்டமாக மாறிய போது, 1956-இல் நாகர்கோவில் நகராட்சியை இரண்டாம்நிலை நகராட்சியாகவும், பின்னர் 1961-இல் முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 12 அக்டோபர் 1978-இல் தேர்வுநிலை நகராட்சியாகவும், 30 மே 1988 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
பின்பு 2019ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்துள்ளார்.


தட்பவெட்பநிலையும், வழித்தடங்களும்

 நாகர்கோவில் நகரை தரை மற்றும் ரயில் மார்க்கமாக எளிதில் அடையலாம். தார்ச்சாலைகளும், பல முக்கிய நகரங்களுடன் ரயில்போக்குவரத்தும் அமைந்திருக்கிறது. நாகர்கோவிலின் கோடை காலங்கள், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளோடு ஒப்பிடுகையில் இதமான வெப்பநிலையையே கொண்டிருக்கிறது. அதேசமயம் வட இந்திய குளிர்காலத்தைப் போல மிக அதிகமான பனி இன்றி ரம்மியமான குளிருடன் இதமாக விளங்குகிறது நாகர்கோயிலின் குளிர்காலங்கள். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நாகர்கோவில் பயணப்படவே பல சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்


கோடைகாலம்

நாகர்கோவில் கடலுக்கு அருகில் இருப்பதால் அதன் புவியியல் அமைப்பின்படி மார்ச் முதல் மே இறுதிவரை கடுமையான வெயில் நிலவுகிறது. அதிகபட்சமாக 35 டிகிரி வரை வெயில் உக்கிரமடையும். உச்சகட்டமாக மதிய நேர வெயில் தாங்கமுடியாத வகையில் கடுமையாகவே இருக்கும்.
மழைக்காலம்

தகிக்கும் கோடைக்குப் பின் வரும் மழைக்காலம் நாகர்கோவிலின் சூட்டைத் தணிப்பதாக இருக்கிறது. மே மாதத்தின் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் இறுதி வரை தொடர்கிறது இடியுடன் கூடிய கனமழை. தட்வெட்ப நிலை 25டிகிரி வரை குறைந்தாலும் காற்றின் ஈரப்பதம் அதிகரித்தபடியே இருக்கிறது.
குளிர்காலம்

நவம்பர் மாத மத்தியில் ஆரம்பிக்கும் நாகர்கோவிலின் குளிர்காலம் இதமான குளிருடன் இருக்கிறது. பிப்ரவரி மத்தி வரை தொடரும் குளிர்காலத்தின் தட்பவெட்ப நிலை 20-22 டிகிரி வரை இருக்கிறது.  காற்றின் ஈரப்பதம் குறைவதால் காலை மற்றும் மதிய வேளைகளில் நகர் உலா செல்ல ஏதுவாக இருக்கிறது. மாலை மற்றும் இரவு வேலைகளில் குளிரை சமாளிக்க கம்பளித் துணிகள் தேவைப்படுகிறது.
அருவி மற்றும் இயற்கை எழில்
 அரபிக்கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே இருக்கும் நாகர்கோவிலைச் சுற்றி அமைந்திருக்கும் இயற்கைச் சூழலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளால் தமிழ்நாட்டில் பெரிதும் விரும்பப்படும் இடமாக நாகர்கோவில் விளங்குகிறது. சிறிய குன்றுகளும், பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளும், நீலக்கல் போன்ற பொழிவுடன் விளங்கும் கடலும் முதல்முறை காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அழகுடன் விளங்குகிறது.  கன்னியாகுமரிக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் நாகர்கோவிலுக்கு வருகை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இயற்கை அழகினால் சிறந்து விளங்கும் நாகர்கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக ஓலக்கருவி நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. நாகர்கோவில் நகரவாழ் மக்கள் அமைதியை விரும்புபவர்களாகவும், சுற்றுலாப் பயணிகளை அன்புடன் நடத்தும் விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மிகவும் பாதுகாப்பான சுற்றுலாத்தளமாக விளங்கும் நாகர்கோவிலில் குற்றச் சம்பவங்கள் மிகக் குறைவாகவே நடக்கிறது. மேலும் உள்ளூர்ப் பிரச்சினைகளை மக்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி முடித்துக்கொள்கிறார்கள். வன்முறையில் இறங்குவதோ, எதற்கெடுத்தாலும் அதிகாரிகளிடம் முறையிடும் வழக்கமோ இங்கு இல்லை. சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட கிராம்பு, ஏலக்காய் தோட்டங்கள் இன்னமும் இருக்கின்றன. அவர்களின் வம்சாவளியினருக்கு சொந்தமாக இன்னும் பல தோட்டங்கள் இங்கு உண்டு. தோட்டத்தில் கால் பதித்தவுடன் ஏலக்காய் வாசனை மதிமயங்கச் செய்கிறது. தனித்துவமிக்க பூலோக அமைப்பால் நாகர்கோவில் வடக்கு மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளின் கலாச்சாரங்களின், பழக்கவழக்கங்களின் சங்கமமாக விளங்குகிறது. மேற்கு ரயில் மற்றும் வடக்கு ரயில்வேயின் சந்திப்பிடமாகவும் நாகர்கோவில் இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து ஒரு ரயில்வழி கேரளா வழியாக கொங்கன் வழித்தடத்திற்கும், மற்றொரு ரயில்வழி தமிழ்நாடு வழியாக திருநெல்வேலி  வழித்தடத்திற்கும் செல்கிறது.




No comments:

Post a Comment