பென்குயின் தமிழ் திரைப்படம் விமர்ச்சனம்
Movie - பென்குயின்
Star Cast - கீர்த்தி சுரேஷ், லிங்கா, மதம்பட்டி ரங்கராஜ்
Director - ஈஸ்வர் காத்திக்
காணாமல் போன மகனைத் தேடும் கர்ப்பிணித் தாய், மகனையும் அவன் காணாமல் போனதற்குப் பின்னுள்ள முடிச்சையும் அவிழ்த்தால், அதுதான் பெண்குயின்!
கதை சுருக்கம்:
அஜய் என்ற தன் தொலைந்த குழந்தையை தேடும் ஒரு தாயின் பயணம். தொலைந்த குழந்தை திடீர்னு ஒரு நாள் முன்னாடி வந்து நிக்கறான். ஆனா அவனுக்கு பேச்சு வரல, மனரீதியா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான். இதை செய்தது யார்.. அதுக்கு காரணம் என்னங்கிறதுதான் படம்.
கதை
நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் (கீர்த்தி சுரேஷ்), கணவன் கவுதமுடன் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்ந்து வருகிறார். ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) விவாகரத்து செய்துவிட்டு, கவுதமை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் ரிதம்.
திருமணத்திற்கு பிறகு ரிதம் கர்ப்பமாக இருக்கிறார். குழந்தையை தொலைத்த சோகத்திலேயே மீண்டும் தாயாக தயாராகுகிறார் ரிதம். இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து குழந்தை அஜய் கிடைத்தாலும் அங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அஜய்யை கடத்தியது யார், ஏன் கடத்தினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார் ரிதம்.இதற்கிடையே குழந்தைகள் கடத்தல் தொடர்கிறது. அஜய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழந்தைகளை கடத்தி உறுப்புகளை எடுத்துவிட்டு கொடூரமாக கொலை செய்கிறார். இதை ரிதம் கண்டுபிடிக்க அவர் தான் அஜய்யை கடத்தினார் என்று நினைக்கிறார். ஆனால் டாக்டரிடம் விசாரித்தபோது தான் வேறு ஒரு உண்மை தெரிய வருகிறது.
அது என்ன உண்மை, அஜய்யை கடத்தியது யார், ஏன் என்பதை சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.
இதுதான் நடக்கும் என்பதை முன்பே யூகித்துவிடக் கூடிய பலவீனமான திரைக்கதை, ஏற்கனவே சில படங்களில் பார்த்துவிட்ட காட்சி அமைப்புகள், படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கின்றன. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அந்த கேம், சரியான நாடகத்தனம். இருந்தாலும் கர்ப்பிணி தாய் பெண்குயினாக கண் முன் நிமிர்ந்து நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்!
www.greencitynagerkovil.blogspot.com

No comments:
Post a Comment