தேனீர் கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் ஆய்வு- நாகர்கோவில்_மாநகராட்சி
நாகர்கோவில் :
20-06-2020
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அவர்களின் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் தேனீர் கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் மாநகர்நல அலுவலர் திரு. கிங்சால் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திரு.பகவதி பெருமாள், திரு . ஜான் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு போத்தல்களில் தேனீர் , சர்பத் போன்ற குளிர்பானங்கள் வழங்கக்கூடாது என அறிவுறுத்தினார்கள்.
மேலும் தடை விதிக்கப்பட்டுள்ள கண்ணாடி கிளாஸ்களில் சர்பத் போன்றவை கொடுத்தால் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.




No comments:
Post a Comment