நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்
திருமதி .ஆஷா அஜித் ஐ ஏ.எஸ்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக ஆஷா அஜித் பொறுப்பு ஏற்றுள்ளார்.
முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி :
நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராக பணியாற்றி வந்தவர் திரு. சரவணகுமார் இவர் மாநகராட்சியை திறம்பட வழிநடத்தி பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார், இந்நிலையில் அவருக்கு பதிலாக ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கபட்டுள்ளார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நியமிக்கப்பட்ட முதல் ஐ ஏ எஸ் அதிகாரி ஆவர்.
பொறுப்பேற்றார் :
இவர் நேற்று மாலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி இஞ்சினியர் பாலசுப்பிரமணியன், மாநகர் நகர்நல அதிகாரி கின்சால், மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு:
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில் தற்போதைய சூழலில் தமிழ்நாடு அரசின் உத்தரவின் அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளில் முதலில் கவனம் செலுத்துவேன் பின்னர் மாநகராட்சியின் பகுதிகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கேரளா மாநிலம் :
புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஆஷா அஜித்தின் சொந்த ஊரு கேரளா மாநிலம் கருணாகப்பள்ளி 2015 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். அப்போது அவர் அகில இந்திய அளவில் 40 வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பயிற்சி உதவி கலெக்டராக கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார். இவர் திருமணம் ஆனா பிறகு கேரளா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் பட்டியலுக்கு மாறினார்.
நேரில் சென்று பார்வையிட்டார்கள்:
இன்று அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடம் கட்டுமானம் பணிகள், கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புளியடி எரிவாயு தகன கூடம் மற்றும் நாகர்கோவில் மாநகர முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணைக்கட்டு ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
மேற்படி இடங்களில் இதுவரை நடைபெற்று வந்த பணிகள் குறித்து முன்னாள் மாநகராட்சி ஆணையர் திரு.சரவணகுமார் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
மேலும் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் அவர்களின் பணி சிறக்க முன்னாள் மாநகராட்சி ஆணையர்
திரு. சரவணகுமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
பணியாற்றிய இடங்கள்
அதன் பிறகு இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி கலெக்டராகவும் தேவகோட்டை சப் கலெக்டராகவும் சட்டம் ஒழுங்கு துணை செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய கணவர் விஷ்னு சந்திரனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றினார். ஆஷா அஜித்தின் தந்தை அஜித்குமார் கேரளா மாநிலம் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர் .





No comments:
Post a Comment