முக்கடல் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயை ஒரே வழி தடத்தில் மாற்றி அமைப்பது குறித்தும் மற்றும் புளியடி பூங்கா மற்றும் அமிர்த வனம் எரிவாயு தகன மேடைக்கு செல்ல புதிய பாதைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பள்ளிவிளை பகுதியிலிருந்து இரண்டு வழித்தடங்களாக தண்ணீர் குழாய்கள் பிரிக்கப்பட்டு கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தற்பொழுது பள்ளிவிளை பகுதியில் அமையப்பெற்றுள்ள குடிநீர் குழாய்கள் மிகவும் பழமை வாய்ந்த நிலையில் இருப்பதால் பழுதடைய வாய்ப்புள்ளது மற்றும் பள்ளிவிளை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை பணிகளால் வரும் காலத்தில் குடிநீர் குழாய்க்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம்
அங்கு இரு வழித்தடங்களில் செல்லும் மாநகராட்சி ஆணையர் திரு. சரவணகுமார் மற்றும் மாநகராட்சி பொறியாளர் திரு. பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபோல அருகுவிளை எம்ஜிஆர் சிலையிலிருந்து கேஸ் குடோன் வழியாக புளியடி பூங்கா மற்றும் அமிர்த வனம் எரிவாயு தகன மேடைக்கு செல்ல புதிய பாதைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த பாதை அமையும் பட்சத்தில் பள்ளிவிளை மற்றும் அருகுவிளை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் அமிர்தவனம் பூங்கா வழியாக புத்தேரி மேம்பாலத்தை சென்றடைய ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment