Breaking

Monday, 22 June 2020

Kanniyakumari- தனிமைப்படுத்தும் முகாமில் அடிப்படை வசதிகளை கேட்ட ராணுவ வீரர்களை காவல்துறையினர் மிரட்டுவதாக புகார் வீடியோ வெளியாகி பரபரப்பு -கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் தனிமைப்படுத்தும் முகாமில் அடிப்படை வசதிகளை கேட்ட ராணுவ வீரர்களை காவல்துறையினர் மிரட்டுவதாக புகார் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கன்னியாகுமரி :
22-06-2020  

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ராணுவ வீரர்கள் விமானம் மூலமாக கேரளா வந்து, அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கன்னியாகுமரிக்கு வந்தனர்.  தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் வரும் வரை அவர்கள் தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் கொரோனா அச்சம் காரணமாக தங்களுக்கு தனித்தனி பக்கெட்கள் தருமாறும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த காவல்துறையினர், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. தனிமையில் இருக்க வேண்டியது கட்டளை என்றும் அதனை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் ராணுவ வீரர்களை மிரட்டுவதாக புகார் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.


அடிப்படை வசதி செய்து தருமாறு மட்டுமே கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் நாட்டுக்காக பணியாற்றும் தங்களை மிக மோசமாக நடத்துவதாக ராணுவ வீரர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment