குவைத்தில் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை : குவைத் சுகாதாரத்துறை அறிவிப்பு...
குவைத் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு குழுக்கள் மூலம் சுழற்சி முறையில் கொரோனா வைரஸ் சோதனையை செயல்படுத்த தொடங்கியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
குவைத் சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு சிறப்பு குழு , நாட்டின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு தெருவிலும் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ள ஒருவரிடம் ஒரு மாதிரியை ஆய்வு செய்து எடுக்கும் .
வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா என்பதை அவர்கள் சோதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு குழு மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை குடியிருப்பு பகுதிகளுக்கு வருகை தரும் என்றும் , ஒரு நாளில் சுமார் 250 வீடுகளில் சோதனைகளை மேற்க்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது .
இந்த குழு குவைத் முழுவதும் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சோதனை நடத்துவதை இலக்காக கொன்றுள்ளது என்றும், பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குவைத் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment