Breaking

Sunday, 21 June 2020

Arumanaloor - மதுரையில் இருந்து வந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் இருந்து வந்த பெண்ணிற்கு  கொரோனா பாதிப்பு

நாகர்கோவில் : 
21-06-2020


குமரி மாவட்டத்தில் தினமும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வெளிமாநிலம், வெளிநாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தற்போது தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. 
இந்த நிலையில் தோவாளை வட்டம் அருமநல்லூர் கிராமத்தில் வசித்துவரும் பெண் (39) (VHN அந்தரபுரம்) என்பவரது மகள் (13)  மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்துள்ளார்.
மேற்படி நபர்க்கு  கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது, இதனால் பாதிக்கப்பட்டவரும்  மற்றும்  அவர்கள் வீட்டில் உள்ள மற்ற இருவரையும்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.







மேலும் அவர்கள் வசித்த வீடு மற்றும் அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி ஊராட்சி  தலைவர், துணை தலைவர், மற்றும் செயல் அலுவலர் தலைமையில்  நடைபெற்றது.


No comments:

Post a Comment