Breaking

Sunday, 28 June 2020

Corona Virus Kanyakumai - தக்கலையை அடுத்த குமாரபுரத்தில் குழந்தை பிறந்த நிலையில் பெண்ணுக்கு கொரோனா உறுதி

தக்கலையை அடுத்த குமாரபுரத்தில் குழந்தை பிறந்த நிலையில் பெண்ணுக்கு கொரோனா உறுதி





பத்மநாபபுரம்:

தக்கலை மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த 71 வயது டாக்டருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய மனைவி, மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவருக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாரோடு பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து டாக்டர் வீடு உள்ள மேட்டுக்கடை பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று தடுப்பு பணிகள் நடைபெற்ற வந்தன. இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்ட மேட்டுக்கடையில் ஒரு சில பகுதிகளில் நேற்று திடீரென கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் மேலும் தொற்று பரவக்கூடும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவை சேர்ந்த 78 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன் தூத்தூரில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக அவருக்கும் சளி, ரத்தம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே மூதாட்டி பத்மநாபபுரம் திரும்பினார்.

இந்தநிலையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல் தக்கலை சடையமங்கலம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூதாட்டி, 38 வயது பெண் ஆகிய 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தக்கலையை அடுத்த குமாரபுரம் செம்பருத்திவிளை பகுதியை சேர்ந்த 30 வயது பெண். இவருக்கும் திங்கள்சந்தை கல்லன்குழியை சேர்ந்த கொத்தனாருக்கும் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான அவர் தயார் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவத்துக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவம் நடைபெற்றது. அதில் அந்த பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது. இந்த தகவலை கேட்டு பெண்ணின் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து சளி, ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தை இறந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் தொற்று இருக்கும் தகவலை அறிந்த உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

No comments:

Post a Comment