Breaking

Sunday, 12 July 2020

Kanyakumari News - கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயண் நியமனம்

 

நாகர்கோவில் :

தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  சாத்தான்குளம் சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு செய்யப்பட்டு தமிழக அரசு கடந்த 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அந்த மாற்றத்தில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் எஸ்பி ஆக ஸ்ரீநாத் பணிபுரிந்து வந்தார்.ஒரு சில தினங்களுக்கு முன்னர் இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார். தற்போது திருப்பூரில் மாநகர துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த பத்ரி நாராயணன் கன்னியாகுமரி மாவட்ட புதிய எஸ்பி ஆக பொறுப்பேற்றுள்ளார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி, காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை சட்டம் ஒழுங்கு பணிகள் மற்றும் தமிழகத்தில் பிரபலமாக பேசப்படும் காசி பாலியல் வழக்கு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளில் புதிய எஸ்பி திறம்பட பணியாற்றுவார் என்பது பொது ஜனங்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment