நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஊரடங்கு விதித்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கையொட்டி குமரிமாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளான வடசேரி,கோட்டார் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு சாலை வெறிச்சோடி காணப்படுகிறது..வெளியே வரும் வாகன ஓட்டிகளை விசாரித்து அனுப்பி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்..அதே போல் பெட்ரோல் பங்க் அடைக்கப்பட்டள்ளது..கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இது வரை செயல்பட்டதை விடவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு பொது மக்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.


No comments:
Post a Comment