தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளையும், பரிசோதனை கருவிகளையும் அமைத்துக்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மேலும் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தென் கொரிய நிறுவனத்திடம் இருந்து கடந்த மாதம் 26-ம் தேதி 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்த நிலையில், இன்று மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு ஆர்டர் தரப்பட்டது. தமிழக சுகாதாரத்துறையிடம் தற்போது 5.60 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளன.
ஏற்கனவே ஆர்டர் தரப்பட்ட 15 லட்சம் பிசிஆர் கருவிகள் முழுவதுமாக தமிழகம் வந்தடைந்துள்ளது. இந்த கருவிகளை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, கொரோனா பரிசோதனையை மேலும் விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment