
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மூலமாகத்தான் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது குமரி மாவட்டத்துக்குள் சில கிராமப்பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன்மூலம் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
திருமண வீட்டில் மணப்பெண்ணின் தாய்க்கு கொரோனா தொற்று:
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற திருமண வீட்டில் மணப்பெண்ணின் தாய்க்கு கொரோனா தொற்று...இதனால் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றவர்கள் கொரோனா தொற்று பரவல் பீதியில் உள்ளனர். திருமண வீட்டிற்கு சுகாதார பணியாளர்கள் கிறுமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட வடசேரி ஆட்டுக்கடை தெரு மற்றும் ஊட்டுவாழ் மடம் வசந்தம் நகர் ஆகிய பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்காலிக சந்தையில் 8 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி :

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த தற்காலிக சந்தையில் 8 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து
பேருந்து நிலையத்தின் 3 வாயில்களும் அடைக்கப்பட்டு சந்தையில் பணியாற்றிய வியாபாரிகள், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகிய அனைவருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிய சந்தை மூடப்பட்டது.
பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக சந்தையில் கடந்த 10 தினங்களுக்குள் பொருட்கள் வாங்கவோ அல்லது வேலைக்காக வந்த நபர்கள் தாமாகவே முன்வந்து அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக் கொள்ளும்படி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணன்கோவில் தெலுங்கு செட்டித்தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:
நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் தெலுங்கு செட்டித்தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் அவரது வீடு மற்றும் வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment