Breaking

Friday, 19 June 2020

Nagercoil Corporation - கொரோனா தொற்று உறுதி - நாகர்கோவில்_மாநகராட்சி

கொரோனா தொற்று உறுதி 

#நாகர்கோவில்_மாநகராட்சி



நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மறவன்குடியிருப்பு மற்றும் வல்லன்குமாரன்விளை பகுதியில் வெளியூரில் இருந்து வீடு திரும்பிய இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.





ஆணையர் திரு. சரவணகுமார் அவர்களின் உத்தரவின் படி மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் திரு. மாதவன்பிள்ளை அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில்  வசிக்கும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட  நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.




www.greencitynagerkovil.blogspot.com

No comments:

Post a Comment