"சிறு அசைவுகளைக் கவனித்து அண்ணாத்த ஆடுகிறார்" - நடிகர் திரு.கமல்ஹாசனால் பாராட்டப்பட்ட இளைஞர் !
கடந்த சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் அஷ்வின் குமார் என்ற இளைஞர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் பாட்டின் நடனத்தை ட்ரெட் மில்லில் ஆடி அந்த வீடியோவை பதிவிட்டார்.
அப்படத்தில் நாயகனாக நடித்த கமல்ஹாசனின் நடன அசைவுகளை அச்சு அசலாக பிரதிபலித்து அவர் ஆடியதில் இணைய வாசிகள் வியந்து போயினார். இந்த முயற்சியைச் செய்த அஷ்வின் குமார் தமிழில் துருவங்கள் 16 படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சில மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் தீவிரமான கமல் ரசிகராக ட்விட்டரில் அறியப்படுகிறார். இதனால் அவருக்கென்று ஓர் ரசிகர் கூட்டம் உண்டு.
Annaathe Adurar on treadmill... Thot of posting it later but couldn't resist to show my fellow kamalians❤️ theres more stock... So heres the first one. #Annaatheadurar #aboorvasagotharargal @ikamalhaasan #kamalhaasan #treadmilldance @cinemapayyan pic.twitter.com/0wFOCNaz2i— Ashwin Kkumar (@ashwin_kkumar) June 12, 2020
அஷ்வின் குமாரின் நடனத்தைப் பார்த்துள்ள கமல்ஹாசன் ட்விட்டரில் அவரை பாராட்டிப் பதிவொன்று வெளியிட்டுள்ளார். அதில் நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! எனக் குறிப்பிட்டுள்ளார்.
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! https://t.co/xDfE7PW7Z0— Kamal Haasan (@ikamalhaasan) June 19, 2020

No comments:
Post a Comment