Breaking

Sunday, 21 June 2020

Corona Virus Tamilnadu - தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை757 ஆக உயர்வு

 தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை757 ஆக அதிகரித்த உயிரிழப்பு



சென்னை: 
21-06-2020

தமிழகத்தில் புதிதாக 2,532 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 32,754 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 53 பேர் உயிரிழந்தனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் 50 நபர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இணை நோய்கள் இருந்ததாகவும், மூன்று நபர்கள் மட்டும் எந்தவித இணைநோய்கள் இல்லாமல் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment