Breaking

Thursday, 18 June 2020

History - Colachel war- குளச்சல் போர்

குளச்சல் போர்

குளச்சல் ஆனது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை கொண்டுள்ள அழகான ஊராகும்.
முதலில் குளச்சல் போர் (Battle of Colachel) என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற போர் ஆகும்.
இப்போர் நடந்த காலகட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் படைகளிடம் நவீன ரக பீரங்கிகள் ஏதும் இல்லை. ஆனால் டச்சு படைகளிடம் துப்பாக்கிகள் இருந்தன.
இதனால் டச்சு படைகளை எதிர்கொள்ள திருவிதாங்கூர் படைகளுக்கு முடியாத நிலை இருந்தது. திருவிதாங்கூர் மன்னரின் மதிநுட்பத்தால் போரில் வியூகம் அமைக்கப்பட்டது. அதன்படி ஏராளமான கட்டை வண்டிகளில் பனை மரத் தடிகளை வைத்து பீரங்கிகள் போல் குளச்சல் கடற்கரையில் அணிவகுத்து நிறுத்திவைத்தார்.
கடலில் கப்பலில் இருந்து பார்த்த டச்சுப்படையினர் திருவிதாங்கூர் படையிடம் ‘நம்மைவிடவும் ராட்சத பீரங்கிகள் உள்ளன’ என நம்பி திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்தனர் 1741 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னர் படைகள் டச்சு படைகளை ராஜதந்திரத்தால் வென்றன.
பனை மரத்தை வைத்தே டச்சு படைகளுக்கு ஆட்டம் காட்டி போரில் வெற்றியும் பெற்றனர்.
இப்போரின் பின் டச்சுக்காரர்களின் இந்திய வணிகம் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டது. இந்த வெற்றியின் நினைவாக குளச்சல் கடற்கரையில் “விக்டரி பில்லர்” என்ற வெற்றித்தூண் நிறுவப்பட்டது.

குளச்சல் போரில் ஏற்பட்ட தோல்வியால் கேரள பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் சரியத் தொடங்கியது. திருவிதான்கூருடன் சமாதானமாக போக விரும்பிய டச்சுக் கம்பெனி 1743 மற்றும் 1753 ஆம் ஆண்டுகளில் திருவாங்கூர் மன்னருடன் வணிக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. குளச்சல் போரின் வெற்றியால் மார்த்தாண்ட வர்மாவின் செல்வாக்கு அதிகரித்ததுடன் தென் கேரளத்தில் அவர் வலிமையான மன்னராக உருவெடுப்பதற்கும் இந்த வெற்றி வழிவகுத்தது.

குளச்சல் போரின்போது திருவாங்கூர் படையில் சேர்க்கப்பட்ட ஐரோப்பிய வீரர்களின் திறமையால் திருவாங்கூர் படை நவீனப்படுத்தப்பட்டு, பல குறுநில அரசுகளும் வீழ்த்தப்பட்டன. கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து விலகி திருவாங்கூர் படையில் இணைந்துகொண்ட யுஸ்டாச் டி லெனாய் என்ற ஐரோப்பிய வீரர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, திருவாங்கூரின் படைத் தளபதியாக பணியாற்றி பல போர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார்.
உதயகிரிக் கோட்டை
குளச்சல் போருக்கும் உதயகிரிக் கோட்டைக்கும் என்ன சம்பந்தம் என்றா பார்க்கிறீர்கள்

இப்போரில் சரணடைந்த டி லனோயின் சமாதி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன.

இக்கோட்டையானது நாகர்கோயில் நகரில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது .90 ஏக்கர் பரப்பளவை கொண்ட இக்கோட்டைக்குள் 200 அடி உயரமுள்ள ஒரு குன்று உள்ளது.இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.
இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.
கன்னியாகுமரி வந்தால் கண்டிப்பாக வந்து பாருங்கள் …
நன்றி.….

No comments:

Post a Comment