பொன்மகள் வந்தாள் - தமிழ் திரைப்படம்.
நிகழ் காலத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்து வரும் வன்கொடுமைகளுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாகி கொண்டிருக்கும் அதிகார திமிரின் மேலும் பெரும்புள்ளிகளின் போலியான கெளரவத்தை தோலுரிக்கும் இந்த திரைப்படம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாக ஆகிவிட கூடாதென்பதை இயக்குநர் மைய கருத்தாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக சுழற்றிய சாட்டை தான் பொன்மகள் வந்தாள். உடனடியாக கிடைக்கும் நீதியை பலபேர் கைதட்டியும் வசைபாடியும் உணர்வெழுத்தியோடு சரியான தண்டனை என பெருமூச்சுவிட்டு எத்தனையோ வழக்குகளின் என்கவுன்டர்களை நாம் நமது வாழ்நாளில் செய்திகளாக படித்திருப்போம். ஆனால் அப்படி உடனக்கு உடன் காவல்துறையால் பல வழக்குகள் திசைமாறியும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கபடாமலேயே இன்றுவரை நம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
தெய்வமாய்
தேசமாய்
தாயாய்
தாரமாய்
மொழியாய்
இப்படி எத்தனை வடிவங்களில் போற்றினாலும்,
தடையின்றி அரங்கேறும் பெண்வன்கொடுமையை
பெண்மையின் வலியை
பெண்மையின் வேதனையை...
ஆண் பிள்ளைகளுக்கும் உணர்த்திய பொன் மகளின் வருகைக்கு வாழ்த்துக்கள்.
இங்கே பல குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை..
ஆனால் பல நல்லவர்களின் அடையாளங்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
பொன்மகள் வந்தாள்
நீதியை நிலைநாட்ட
www.greencitynagerkovil.blogspot.com


No comments:
Post a Comment