Breaking

Tuesday, 30 June 2020

Husband and wife in the family - குடும்பத்தில் கணவன் மனைவி


இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு தேவையான பயனுள்ள பதிவு பிடித்திருந்தால் பகிரவும்...

கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரை போல் இருந்திட வேண்டும் மனைவி.
பாலில் எவ்வளவு தான்  தண்ணீர் கலந்தாலும் பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை 
தண்ணீரை பிரித்து காட்டும் குணம் பாலுக்கு இல்லை. 
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில் , தண்ணீர் நீராவியாக பிரிந்து செல்ல, அதை தாங்க முடியாத பால் கோவத்தில் பொங்கி எழுந்து மேலே வரும், பொங்கிவரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச்  சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பிய மகிழ்வில், 
பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒருவேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அனைத்துவிடும்.
அந்த பாலும் நீரும் போல கணவனும் மனைவியும் 
ஒருவருக்கொருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் என்னும் நெருப்பு அணையாமல் இருக்கும் 
ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் காலம் தான் வாழ்க்கையின் வசந்த காலம்.
எவ்வளவு வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு ......


No comments:

Post a Comment