நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..!
நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படும். ஆண்டுதோறும் பிரம்மாண்ட முறையில் பேனர்கள், போஸ்டர்கள் என ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தாண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் சிலர் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல சுவாரசிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரையின் பல இடங்களில் ஒட்டி வருகிறார்கள், அதில் குறிப்பாக ‘சிவாஜி கமலுக்கு அடுத்தபடியாக திரை உலகின் 3வது தமிழ் வாரிசு எனவும், தமிழகத்தை காக்க வரும் தன்னலமற்ற தலைவன்’ என விஜய்யை புகழ்ந்து ஒட்டியுள்ள போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது.





No comments:
Post a Comment